Wednesday, September 25, 2013

நீலகிரி மலைப் பிரயாணங்கள் - 1

நீலகிரி மலை என்றாலே முதலில் நாம் நினைவுக்கு வருவது உதகை நகரம்தான். நாம் சுற்றப்போகும் இடங்களில் நிச்சயம் உதகை நகரம் இல்லை!. அதைவிட மிக மிக அருமையான மக்கள் கை, கண் படாத இடங்கள் நிறைய உள்ளன நீலகிரி மலைகளில்.

இந்த மாதிரியான இடங்களில் சுற்றித் திரிய முதலில் அதற்கான மனநிலை மிகவும் அவ்சியம். அங்கே சென்ற பின்னும் அலைபேசியை வைத்துக்கொண்டு அல்லாடுபவர்களுக்கு அங்கே வேலையே இல்லை.

ஒவ்வொரு முறை செல்லும் போதும் நீலகிரி மலைத்தொடர்கள் ஒவ்வொரு பரிமாணத்தில் எனக்கு தோன்றுவதும், முதல் முறை அங்கு செல்வது போல மனதில் ஏற்படும் கிளர்ச்சிகளும் சொல்ல முடியாதவை.

நீலகிரி மலைத்தொடர்களை பல பகுதிகளாக பிரித்துக்கொண்டு நம்முடைய பிரயாணங்களை நாம் திட்டமிடலாம். உதகையில் இருந்து நேர் வடக்குப் பகுதியில் பிரயாணம் செய்து தலைக்குந்தாவில் இருந்து கல்லட்டி வழியாக செங்குத்தாக 36 தொடர் கொண்டை ஊசி வளைவுகளில் கீழிறங்கினால் நாம் சென்றடைவது முதுமலை புலிகள் வனவிலங்கு சரணாலைய பகுதி. அங்கேதான் மசினகுடி சமவெளியும், கண்கொள்ளா மாயார் பள்ளத்தாக்குப் பகுதியும் அமைந்துள்ளது.

படம்-1 மாயார் பள்ளத்தாக்கின் ஒரு பகுதி




No comments:

Post a Comment